உள்ளடக்கத்துக்குச் செல்

சேர் சா சூரியின் கல்லறை

ஆள்கூறுகள்: 24°56′53″N 84°00′33″E / 24.9481°N 84.0092°E / 24.9481; 84.0092
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர் சா சூரியின் கல்லறை
சாசாராம் நகரில் அமைந்துள்ள சேர் சா சூரியின் கல்லறை .
இடம்சாசாராம், பீகார்
வடிவமைப்பாளர்மிர் முகம்மது அலிவால் கான்
வகைஇந்திய-இசுலாமியக் கட்டிடக்கலை
கட்டுமானப் பொருள்மணற்கல்
உயரம்122 அடி
முடிவுற்ற நாள்16 ஆகஸ்ட் 1545
அர்ப்பணிப்புசேர் சா சூரி
Tomb is located in பீகார்
Tomb
Tomb
பீகாரில் கல்லறையின் அமைவிடம்

சேர் சா சூரியின் கல்லறை (Tomb of Sher Shah Suri) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சாசாராம் நகரில் உள்ளது. முகலாயப் பேரரசை தோற்கடித்து வட இந்தியாவில் சூர் பேரரசை நிறுவிய பீகாரைச் சேர்ந்த பஷ்தூன் பேரரசர் சேர் சா சூரி நினைவாக இந்த கல்லறை கட்டப்பட்டது. ரபி உல் அவ்வலின் 952 வருடத்தின் பத்தாவது நாளில், அல்லது பொ.ச. 1545 மே 13 அன்று கலிஞ்சர் கோட்டையில் தற்செயலான ஒரு குண்டு வெடிப்பில் சேர் சா சூரி இறந்தார்.[1][2]

கட்டிடக்கலை

[தொகு]

இந்தக் கல்லறை இந்திய-இசுலாமியக் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது கட்டிடக் கலைஞர் மிர் முகம்மது அலிவால் கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1540க்கும்ம் 1545க்கும் இடையில் கட்டப்பட்டது.[3] கிட்டத்தட்ட சதுரமாக இருக்கும் ஒரு செயற்கை ஏரியின் நடுவில் நிற்கும் இந்த சிவப்பு மணற்கல் கல்லறை (122 அடி உயரம்) இந்தியாவின் இரண்டாவது தாஜ் மகால் என்று அழைக்கப்படுகிறது. கல்லறையைச் சுற்றியுள்ள ஏரி சுர் வம்சத்தால் ஆப்கானிஸ்தான் சுல்தான்களின் கட்டிடக்கலை வளர்ச்சியாகக் காணப்படுகிறது.[4]

இந்த கல்லறை சேர் சாவின் வாழ்நாளிலும், அவரது மகன் இஸ்லாம் ஷாவின் ஆட்சியிலும் கட்டப்பட்டது. சேர் சா சூரியின் இறப்புக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1545 ஆகஸ்ட் 16 ஆம் தேதி நிறைவடைந்ததாக ஒரு ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.[5] [6]

புகைப்படங்கள்

[தொகு]

நடப்பு

[தொகு]

பழையப் புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shershah Suri's Tomb, Sasaram - Ticketed Monument Archaeological Survey of India
  2. Kissling, H. J.; Barbour, N; Spuler, Bertold; Trimingham, J. S.; Bagley, F. R. C.; Braun, H.; Hartel, H. (1997). The Last Great Muslim Empires. BRILL. pp. 262–263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-02104-3. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.
  3. Narayan Sanyal (2016). Abiswaraniya (Bengali). Kolkata: Dey's Publishing. p. 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-295-2648-9.
  4. Habib (2007). Medieval India the study of a civilization. National Book Trust, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-5255-6.
  5. Catherine B. Asher (1977). "The mausoleum of Sher Shah Suri". Artibus Asiae (Artibus Asiae Publishers) 39 (3/4): 273–298. doi:10.2307/3250169. 
  6. "Sasaram". Institute of Oriental Culture, University of Tokyo. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  • Tomb of Sher Shah by R Chopra, Indo-Iranica Vol. 10 (2)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்_சா_சூரியின்_கல்லறை&oldid=3784210" இலிருந்து மீள்விக்கப்பட்டது